VALUE PLUS

Develop yourselves. Unleash the inner power. Be a successful person in your life. You are the designer of your life

Thursday, March 03, 2016

வாழ்க்கையில் மகிழ்ச்சி

வாழ்க்கையில் மகிழ்ச்சி

வீட்டை விட்டு கிளம்பி அலுவலகத்திற்கு வருகிறோம். வழியில் பார்ப்பவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா ? அலுவலகத்திற்க்கு உள்ளே செல்கிறோம். எதிரில் வருபவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்களா ? காலை முதல் இரவு வரை நாம் சந்திக்கும் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்களா ?
10 சதவீத மக்கள் சந்தோஷமாக இருந்தால் மிக்க சந்தோஷம்.
90 சதவீத மக்கள் சந்தோஷமாக இல்லை. ஏன் இல்லை ?
அட  நாமும் சந்தோஷமாக இருக்க முடிகிறதா ? பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறோமா அல்லது சந்தோஷத்தை உணர்கிறோமா ? வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்க பிறந்தவர்கள். எங்கே தொலைத்தோம் ?
ஒரு முறை தங்கள் கல்லூரி பேராசிரியரைப் ப் பார்க்க பழைய மாணவர்கள்  வந்திருந்தனர்.வாழ்க்கையின் டென்ஷன் மற்றும் மன அழுத்தங்களைப் பற்றி பேச்சு வந்தது. ப்ரொஃபஸர் அடுக்களைக்குப் போய் காஃபி போட்டுக் கொண்டு அதை விதவிதமான கோப்பைகளில் ஊற்றி எடுத்து வந்தார். (கிளாஸ் கப், க்ரிஸ்டல் கப், பளபளக்கும் பீங்கான், சில சாதாரண கோப்பைகள், சில நிறம் மங்கிய கப்புகள், சில மிக விலை உயர்ந்த கோப்பைகள்). எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக் கொண்டார்கள்.
பேராசிரியர் சொன்னார் - கவனித்தீர்களா? அழகான மற்றும் விலை உயர்ந்த கோப்பைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டன. சாதாரண கோப்பைகளை சீண்டுவாரில்லை. உங்கள் எல்லோருக்கும் சிறந்த கோப்பைகளே தேவைப்பட்டன.
உங்கள் டென்ஷனுக்கும் மன அழுத்தத்துக்கும் இது தான் காரணம். உங்களுக்கு காஃபி தான் தேவைப்பட்டது - கோப்பை அல்ல. ஆனாலும் சிறந்த கோப்பையையே தேர்ந்தெடுத்தீர்கள். வாழ்க்கை தான் காஃபி. நீங்கள் பார்க்கும் வேலை, பணம், ஸ்டேட்டஸ் இவையெல்லாம் கோப்பைகள். இவை வாழ்க்கையை பற்றிக்கொள்ள உதவும் உபகரணங்களே. கோப்பைகளைக் கொண்டு வாழ்க்கையெனும் நதியைக் கடக்க முயலாதீர்கள். காஃபி எனும் வாழ்க்கையை அனுபவியுங்கள்
உலகத்தில் மிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் உலகத்தில் உள்ள அத்தனை சிறந்த பொருட்களையும் வைத்திருக்கவில்லை.  இருக்கும் பொருட்களை தனக்கு கிடைத்தவைகளை  மிக சிறந்தவை என நினைத்து சந்தோஷப்படுவதால்  மட்டும் தான்.
நம்மிடம் என்ன என்ன நல்ல அம்சங்கள் இருக்கின்றன என தெரியாமலே அடுத்தவரிடம் உள்ள விஷயங்களை பார்த்து பார்த்து நமது தாழ்வு மனப்பான்மையை வளர்த்து கொண்டு இருக்கிறோம்.
மற்றவர்கள் நம்மை பாராட்ட வேண்டும் என ஏங்கி கொண்டிருக்கிறோமா ?  மற்றவர்கள் கை தட்டல்களை எதிர்பார்ப்பதை குறைத்தாலே நமக்கு நிறைய கை தட்டல்கள் வரும். புதிய ஆடை வாங்கினால் உடனே மற்றவர்களிடத்தில் காண்பித்து அவர்கள் நன்றாக இருக்கிறது என்றால் நமக்கு  சந்தோஷம். அவர்கள் ஓகே என்று சொன்னாலே நமது சந்தோஷம் போய் விடுகிறது என்றால் நமது சந்தோஷம் மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளிலா இருக்கிறது ? நமது சந்தோஷம் வெளியில் இருக்கிறதா நமக்கு உள்ளேயே இருக்கிறதா ?
நம்மை சுற்றி என்ன நடந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியுமா ?.  ஏன் முடியாது ? ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்திருக்கும்போழுது  நமக்கு   முன்னே இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று இன்று முழுவதும் நான்  சந்தோசமாக இருக்கபோகிறேன் என உறுதி எடுத்து கொள்ளலாம். அல்லது இன்று முழுவதும் உம்மணா   மூஞ்சியாக இருக்கபோகிறேன்  என நினைத்து கொள்ளலாம். அன்று முழுவதும் அப்படிதான் நடக்கபோகின்றன  நாம் தான் நமது சந்தோஷத்தை  தீர்மானித்து கொள்கிறோம். வாழ ஆசைப்படுங்கள். சந்தோஷமாக வாழ ஆசை படுங்கள்.