VALUE PLUS

Develop yourselves. Unleash the inner power. Be a successful person in your life. You are the designer of your life

Sunday, June 04, 2023

"Effective Strategies for Wildfire Control: Prevention, Mitigation, and Firefighting Techniques"

Controlling wildfires is a complex task that involves a combination of prevention, mitigation, and firefighting strategies. While it is important to note that only trained professionals should engage in firefighting efforts, here are some general approaches to controlling wildfires: Prevention: Create and enforce fire safety regulations and guidelines. Maintain a defensible space around structures by clearing flammable debris. Regularly inspect and maintain power lines to prevent electrical fires. Educate the public about fire safety and responsible behavior in fire-prone areas. Monitor and manage controlled burns to reduce fuel load and maintain ecosystem health. Early detection and reporting: Establish a comprehensive system for detecting wildfires, including lookout towers, aerial surveillance, and satellite monitoring. Encourage prompt reporting of wildfires by the public. Utilize technology such as drones and sensors for early detection. Rapid response: Develop an organized and well-trained firefighting force, including personnel, equipment, and aircraft. Establish incident command systems and coordination mechanisms. Deploy resources quickly to contain and extinguish wildfires in their early stages. Fuel management: Implement fuel reduction strategies such as controlled burns, mechanical thinning, and prescribed fires. Create fire breaks and clear vegetation around high-risk areas. Use fire-resistant building materials and design techniques in fire-prone regions. Airborne firefighting: Utilize aircraft, including helicopters and planes, to drop water, fire retardants, and suppressants on the fire. Coordinate aerial operations with ground crews to maximize effectiveness. Public awareness and preparedness: Educate communities about wildfire risks and the importance of preparedness. Develop and communicate evacuation plans and routes. Encourage homeowners to create defensible spaces and maintain fire-safe practices around their properties. It is crucial to remember that wildfire control is a complex task and should primarily be handled by trained professionals. If you encounter a wildfire or suspect one, contact the appropriate authorities immediately and follow their instructions. Suppression techniques: Utilize hand tools, such as shovels, axes, and rakes, to construct firelines by removing vegetation and creating a barrier. Deploy fire engines equipped with hoses, pumps, and water to directly attack the flames and extinguish the fire. Implement back-burning techniques, where a controlled fire is set ahead of the main fire to consume fuel and create a firebreak. Use specialized equipment, such as bulldozers and skid steers, to clear vegetation and create fire breaks more efficiently. Collaboration and mutual aid: Foster collaboration among local, state, and federal agencies, as well as neighboring jurisdictions, to share resources and coordinate efforts. Establish mutual aid agreements to assist each other during large or complex wildfires. Seek international assistance through mutual aid agreements and firefighting resources during severe fire seasons. Weather monitoring and prediction: Monitor weather conditions, including temperature, humidity, wind speed, and direction, to assess fire behavior and predict its spread. Utilize advanced technologies, such as satellite imagery and weather models, to track fire movements and plan firefighting strategies accordingly. Issue timely warnings and alerts to communities at risk based on weather forecasts and fire behavior predictions. Rehabilitation and post-fire management: Develop post-fire rehabilitation plans to restore affected ecosystems and prevent erosion, soil degradation, and invasive species. Implement erosion control measures, such as installing erosion control blankets and reseeding burned areas. Conduct post-fire assessments to evaluate the effectiveness of suppression efforts and identify lessons learned for future fire management. Research and technology: Invest in research and development of advanced firefighting technologies, such as improved fire-retardant materials, more efficient equipment, and enhanced fire modeling systems. Explore innovative approaches, such as the use of drones for firefighting, remote sensing technologies, and data analytics for early detection and monitoring. Collaborate with scientific institutions and organizations to advance knowledge and understanding of fire behavior, ecology, and management techniques. The primary goal in controlling wildfires is to prioritize the safety of human life. Always follow the instructions of emergency authorities and evacuate when instructed to do so.

Thursday, June 03, 2021

DRONE PRATAP - The Great Boy

பாராட்டுவோம். பெருமைப்படுவோம்.. இந்த பையனுக்கு வயது 21 தான் ஆகிறது. 1 மாதத்திற்கு குறைந்தது 28 நாட்கள் விமானத்திலேயே வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறார். "FRANCEல் இருந்து அழைப்பு. மாதம் 16 லட்சம் தருகிறோம். 5 Bedroom வீடு தருகிறோம். 2.5Cr மதிப்புள்ள Car தருகிறோம். எங்கள் நாட்டிற்கு வந்து பணிபுரியுங்கள் என்று கெஞ்சுகின்றது" ஆனால் மறுத்து விட்டார். "பிரதமர் இவரை அழைத்து உயரிய விருது அளித்து கௌரவித்துள்ளார். மற்றும் DEFENCE DRDOவில் இணைந்து அத்துறையை மேம்படுத்தும்படி கேட்டுள்ளார்" கர்நாடகாவில் பிறந்த இவர் அப்படி என்னதான் சாதித்து விட்டார்? விரைவில் எதிர்பாருங்கள்..... DRONEBOY Pratap இவர் சாதனை பற்றி 3 பாகமாக பார்க்கலாம். *பாகம் 1* இவர் பிறந்தது கர்நாடக மாநிலத்தில் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறு குக்கிராமம். தந்தைக்கு விவசாயம். மாத வருமானம் சுமார் Rs.2000/-. சிறு வயதிலேயே Electronics மேல் விருப்பம். *College படிப்பு* +2 படித்துக்கொண்டே Electronics துறையில் இருந்த தாகத்திற்கும் இவர் தீனி போடத் தவறவில்லை. பக்கத்தில் உள்ள Cybercafe netcenterல் internet மூலம் drone சம்பந்தமான தகவல்களை திரட்டி உள்ளதைப் பார்த்தால் மிகவும் பிரமிப்பாக உள்ளது (Aviation websites , Research websites, Space websites, Roles Roy car Blueprint , Boeing777 Blueprint அனைத்தையும் பிரித்து மேய்ந்துள்ளார்.). Scientistகள் Emailidக்கு mail அனுப்பி தன் சந்தேகங்களை (Butler Englishல் ) கேட்டிருக்கிறார். (100 mail அனுப்பினால் 1 பதில் வருமாம். அதுவும் கடந்த 2 வருடங்களாகத்தான் English கற்றுக்கொள்ளவே ஆரம்பத்திருக்கிறார்.). Engg college படிக்க ஆசை. ஆனால் பணவசதி இல்லை. ஆகையால் Bsc Physics சேருகிறார். பின் மைசூரில் BSc 3வது வருடம் படிக்கும்போது Hostel Fees கட்டமுடியாமல் வெளியே துரத்தப்பட்டார். தெருவில், நடைஓர platformல், Busstandல் தங்கியுள்ளார். நகரத்தையே பார்த்திராத இவருக்கு மைசூர் Busstand ஒரு palace மாதிரி இருந்தது என்கிறார். அங்கு Public toiletல் துணி துவைத்து College படிப்பை தொடர்ந்து இருக்கிறார். Tuition எடுத்து அதில் வந்த வருமானத்தில் (Rs.20க்காக அதிகாலை 2மணிக்கு எழுந்து 16 km நடந்து) எப்படியாவது ஒரு பறக்கும் Machineஐ குறைந்த செலவில் உருவாக்கிட வேண்டும் என தீவிரமாக எண்ணினார். அப்பொழுது அதன் பெயர் Drone என்பது கூட அவருக்குத் தெரியாது. Courseல் சேருவதற்கு பணம் கிடையாது என்ற காரணத்தினால் C++ JavaCore Python Adobe Cloud Computing போன்ற Softwareகளை எல்லாம் சுயமாகக் கற்று , அவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். பின் Bombay, Visakappattinam போன்ற ஊர்களில் மலைமலையாக குவிக்கப்பட்டிருந்த eWaste Scrap yardல் தேடி அலைந்தார். இப்படியாக தனது Drone Projectக்கு ஆகும் செலவை 40% வரை குறைத்துள்ளார். ஏகப்பட்ட முறை முயன்று தோல்வி அடைந்து பின் மனம் தளராது தனது 80 வது முயற்சியில் வெற்றி பெற்றார். அன்று தானே பறப்பது போல இருந்தது என சந்தோசமாக சொல்கிறார். *பாகம் 2* IIT நடத்தும் ஒரு Drone Competionல் கலந்து கொள்வதற்காக unreserved compartmentல் 3 நாள் ரயிலில் டில்லிக்கு பயணம் செய்கிறார். சரியான Shoes கிடையாது. சரியான Dressகிடையாது. இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் கலந்து கொண்ட அந்த போட்டியில் 2 வது பரிசு கிடைக்கிறது. அவரது உற்சாகம் பீறிட்டுக் கொள்கிறது. "ஜப்பானில் இதே மாதிரி ஒரு போட்டி நடக்கிறது. அதில் கலந்து கொள்ளுங்களேன்" என்று யாரோ சொல்ல அதற்கான முயற்சியில் இறங்குகிறார். அதற்காக passport visa எல்லாம் வாங்க வேண்டும் என்பது கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. தன்னுடைய 10th, +2 marksheetஐ அடமானம் வைத்து கொஞ்சம் பணம் பெநுகிறார். பல்வேறு நபர்கள் (College friends, professors) முடிந்தவரையில் இவருக்கு உதவுகிறார்கள். ஒருவழியாக Tatkalல் passport visa எல்லாம் வாங்கி விட்டார். ஆனால் ஆணிவேரை அசைக்கிற மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. ஜப்பானில் நடக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு Professor Phdயிடம் இவரது project report எல்லாம் சமர்ப்பித்து Approval வாங்க வேண்டும். அதற்காக சென்னைக்கு கிளம்புகிறார். கையில் இருப்பதோ வெறும் 300 ரூபாய்தான். *புண்ணியம் கட்டிக் கொண்ட சென்னை* சென்னையோ இவருக்கு புதிது. ஒரு வழியாக professor வீட்டைக் கண்டுபிடித்து கேட்டால் அவர் வீட்டில் இல்லை. தொடர்ந்து 4 நாட்களாக படையெடுக்கிறார். கையில் காசு கரைந்து கொண்டே இருக்கிறது. Public toiletல் துணியை துவைத்து (ஒரே ஒரு Dressதான் கைவசம். அதைத்தான் துவைத்து மறுநாள் உடுத்த வேண்டும் ) central railway stationல் platformல் உறங்கி.... இப்படி போகிறது வாழ்க்கை. கடைசியாக professorஐ சந்திக்கிறார். Project reportஐ பார்த்த அந்த professor புண்ணியம் கட்டிக் கொள்கிறார். "நீயோ BSc Arts Group. உன் படிப்புக்கும் நீ பண்ணுகின்ற இந்த projectக்கும் என்ன சம்பந்தம்? கையெழுத்து போட மறுத்து விடுகின்றார். மறுபடியும் Back to Square 1. Drone project வேறு பாதியில் நிற்கிறது. அதையும் ready பண்ண வேண்டும். தொடர்ந்து 31 நாட்கள் Professor கையெழுத்துக்காக படை எடுக்கிறார். காலை tiffinக்கும் இரவு dinnerக்கும் ஒரே ஒரு ரொட்டி துண்டுதான்(Rs.5/-). மற்ற நேரத்திற்கு தண்ணீர்தான் உணவு. 14 நாட்களுக்குள் கையில் உள்ள பணம் அனைத்தும் காலி. ரொட்டிக்கு கூட வழி இல்லை. கடைசியில் 31 நாட்கள் கழித்து எப்படியோ Signature வாங்கியபின் Mysoreக்கு திரும்புகிறார். *ஜப்பான் பயணம்* இந்திய நாட்டின் சார்பாக இந்த போட்டியில் கலந்து கொள்ள பயணச்செலவு (குறைந்தபட்சம்) Rs.60000 தேவைப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு பலமுறை mail போட்டும் ஒன்றும் பயனில்லை. மைசூரில் உள்ள கருணை உள்ளம் கொண்ட ஒரு சுவாமிஜி Flight ticket எடுத்துக் கொடுக்கிறார். எவ்வளவு முயற்சி செய்தும் பணம் பற்றாமல் தன் தாயின் தாலிக்கொடியை விற்று இதர பயண செலவுகளை சமாளிக்கிறார். Bangalore busstandயே பார்க்காத தனக்கு முதல் விமானப்பயணமே International flight. அதுவும் Transfer flight வேறு. மிகவும் சிரமப்பட்டு திக்கி திணறி ஒரு வழியாக தன்னந்தனியாக TOKYOல் போய் இறங்குகிறார். *பாகம் 3* *Tokyo Exibition Centre* கையில் இருப்பதோ வெறும் Rs.1400தான். Airportவ் இருந்து Exibition Centreக்கு Bullet trainல போனால் 2 மணி நேரம்தான் ஆகும். அதிக செலவு ஆகும் என்பதால் Normal trainல போகலாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் ஒரு பிரச்சினை. 16 Station மாற வேண்டும். ஒவ்வொரு Stationலயும் அத்தனை LIFTடையும் Elevatorயும் platformயும் கடந்து லக்கேஜோட Train மாற வேண்டும். எதுவும் சாப்பிடவில்லை. கடைசி Station வந்தாயிற்று. Exibition Centre அங்கிருந்து 8 km . மறுபடியும் அனைத்து Boxயும் தூக்கி பின் இறக்கி வைத்து இப்படியே 8 KM நடந்து ஒரு வழியாக 5 நாட்கள் கழித்து Exibition Centreஐ அடைகிறார். *இறுதிச்சுற்று* 127+ நாடுகள் பங்கேற்கிற அந்த Expoவில் எப்படியாவது 70வது இடத்தையாவது பிடித்துவிடவேண்டும் என்று வெறியுடன் Resultஐ பார்த்துக்கொண்டே இருக்கிறார். *இவர் பேர் வரவில்லை.* 50வது இடமாவது வருகிறதா என்று Resultஐ பார்க்கிறார். *இவர் பேர் வரவில்லை.* 30வது இடமாவது வருகிறதா என்று Resultஐ பார்க்கிறார். இதில் Chinese universityதான் ஆதிக்கம் செலுத்துகின்றது. *இவர் பேர் வரவில்லை.* 20வது இடமாவது வருகிறதா என்று Resultஐ பார்க்கிறார். இதில் Europe மற்றும் German universityகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. நம்பிக்கையற்ற நிலையில் எல்லாவற்றையும் Repack பண்ணுகிறார். தான் பட்ட கஷ்டம் எல்லாம் கண்முன்னே நிழல் ஆடுகிறது. வேற வழி தெரியாமல் கடைசி rowல் போய் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறார். Top 10 பட்டியல் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதில் Americaவின் top universityகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. எப்படியும் STANFORD Universityதான் FIRST PRIZE என்று எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 2nd prize STANFORD University என்று Announce பண்ணியவுடனே அப்போ யார் 1st prize? "Please welcome Mr.Pratap GOLD MEDALIST from INDIA" நம்ம ஆளுக்கு அழுகை அழுகையாக வருகிறது. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர். INDIA கொடி மேலேயும் AMERICA கொடி கீழேயும் இறங்குவதை பார்த்ததும் "கண்முன்னே அம்மாவின் தாலி வந்து போகின்றது" 10000$ REWARDஆக தருகின்றார்கள். அதற்கப்புறம் என்ன ஒரே ஆரவாரம் கொண்டாட்டம்தான். Karnataka MLA MP எல்லோரும் இவருடைய வீட்டுக்கு படை எடுக்கிறார்கள். FRANCEலும் போய் அங்கேயும் First prize. உலக நாடுகள் அனைத்தும் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றது. "உலக நாடுகள் எங்கள் நாட்டிற்கு வந்து பணிபுரியுங்கள் என்று கெஞ்சுகின்றது. ஆனால் மறுத்து விட்டார்" 🇮🇳 இந்தியாவின் மினி அப்துல் கலாம் வாழ்த்துகள் தம்பி

Tuesday, April 02, 2019

ஒரு சதவீத முன்னேற்றம்

ஒரு சதவீத முன்னேற்றம் 1 :
சூப்பர் மார்க்கெட் அல்லது மால்களில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கும் பொழுது பில்லில் பொருள் வாரியாக விலையை சரி பாருங்கள்.
அதிகம் பேர் அப்படியே பைக்கு உள்ளே போட்டு விட்டு செல்கிறார்கள்.
பில் போட்ட பின் ஒரு பொருள் விட்டு போய் இருக்கலாம்
அதிக விலை போட்டிருக்கலாம்
அறிவிக்கப்பட்ட டிஸ்கவுண்ட் கிடைக்காமல் போயிருக்கலாம்
இலவச ஆபர் பொருள் தர விடுபட்டு இருக்கலாம்.
நீங்கள் சரிபார்த்து வாங்கும் நபராக மாறுங்கள்

ஒரு சதவீத முன்னேற்றம் 2:
உணவுப்பொருட்களை கடைகளில் வாங்கும் பொழுது அதன் தயாரிக்க பட்ட தேதியை சரி பாருங்கள். காலாவதி ஆவதற்கு மிக அருகில் உள்ள பொருட்களை வாங்க வேண்டாம்.
இன்னும் ஐந்து நாளில் பத்து நாளில் காலாவதி ஆகப்போகிற பொருட்களை தள்ளுபடி விலையில் விற்கலாம்.
தள்ளுபடி விலைக்காக ஆரோக்யத்தை கெடுத்துக்கொள்ளாதீர்கள்

ஒரு சதவீத முன்னேற்றம் 3:
கடையில் பிரட் வாங்கும்பொழுது அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ப்ரேட்களில் கீழே இருக்கின்ற பிரெட் தான் கடைசியாக அன்று வந்ததாக இருக்கும். அதை வாங்குங்கள். மேலே இருப்பது சீக்கிரம் காலாவதி ஆகப்போகிற பிரெட் ஆக இருக்கும்.
உதாரணம்: மேலே இருக்கும் பிரெட் நாளைக்கோ அல்லது மறுநாளோ காலாவதி ஆகும்.
கீழே இருக்கும் பிரெட் இன்னும் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் கழித்து காலாவதி ஆகும்.

ஒரு சதவீத முன்னேற்றம் 4:
பிரெட் வாங்கும் பொழுது அருகில் உள்ள பேக்கரி பிரெட் வாங்குங்கள். அன்றன்று தயாரித்து தருவார்கள். மிக மிருதுவாக இருக்கும்.
கடையில் வாங்கும் பிராண்டட் பிரெட் எல்லாம் ஷெல்ப் லைப் தாக்குபிடிப்பது போல தயாரிப்பதினால் அவ்வளவாக மிருதுவாக இருக்காது.
லோக்கல் பேக்கரி பிரட் அதிக நாள் வைத்திருக்க முடியாது. ஆனால் சுவையும் மிருதுவாக இருக்கும் தன்மையும் அதிகம்

ஒரு சதவீத முன்னேற்றம் 5
டூ வீலர் எடுத்துக்கொண்டு வெயிலில் நிறுத்தி விட்டு திரும்ப எடுத்து ஓட்டும் பொழுது சூடான சீட் நமது பின் புறத்தை ஒரு வழி பண்ணிவிடும்.
எப்பொழுதும் ஒரு பாட்டில் தண்ணீர், வண்டி பெட்டியில் எடுத்து செல்லுங்கள். அப்படி சூடான சீட்டின் மீது துணியை வைத்து தண்ணீரை விட்டு, ஒரு நிமிடம் கழித்து மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி துடைத்து விட்டு வண்டி ஓட்டுங்கள். ஜில் என்று உணருவீர்கள்.
பல வருடம் நான் கடை பிடித்து வருகிறேன்.

ஒரு சதவீத முன்னேற்றம் 6:
உங்கள் வீடு Cup Board ற்கு இரண்டு அல்லது மூன்று சாவி கொடுக்கப்பட்டிருக்கும்
இரண்டாவது சாவி எங்க இருக்கிறது ?
அநேக வீடுகளில் அதே கப் போர்டுக்கு உள்ளேயே லாக்கரில் பத்திரமாக இருக்கிறது.
உங்களுக்கு இரண்டாவது சாவி கொடுத்து என்ன பயன் ?
அதை பத்திரமாக வேறு இடத்தில வைத்திருந்தால், இந்த சாவி தொலைந்து போனாலோ அல்லது தேடும் போது கிடைக்க வில்லை என்றாலோ இரண்டாவது சாவியை எடுத்து பயன்படுத்தலாம் அல்லவா ?

ஒரு சதவீத முன்னேற்றம் 7:
குளிக்கும் பொழுது உங்களது சோப் அன்றுடன் காலி ஆகி விட்டால் நாளை புதியது எடுத்து கொள்ளலாம் என்று நினைத்து விடாதீர்கள். நாளை உள்ளே சென்ற பின் தான் ஞாபகம் வரும் சோப் இல்லையென்று..
ஆதலால் உடனடியாக அடுத்த சோப்பை எடுத்து உள்ளே வைத்து விடுங்கள்

ஒரு சதவீத முன்னேற்றம் 8 :
உங்கள் ஆதார் கார்டை Xerox எடுக்க போகும்பொழுது
முதலில் ஒரு நகல் எடுங்கள். மிக தெளிவாக இருந்தால் மேலும் இரண்டு, மூன்று நகல்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில் ஆதார் கார்டில் உள்ள போட்டோ நாம்தானா என்று நமக்கே சந்தேகம் வரும். தெளிவாக எடுக்கும் xerox பல நகல்கள் எடுத்துக்கொண்டால் நல்லது. அவசரத்திற்கு ஓடி அலைய வேண்டாம்.

ஒரு சதவீத முன்னேற்றம் 9
உங்கள் அலுவலகத்தில் உள்ள தீ அணைப்பான் கருவியில் உள்ள பௌடரை எப்பொழுது மாற்ற வேண்டும் என்று ஒரு லேபலில் போட்டிருப்பார்கள். (Expirty Date) அது அநேகமாக சுவரை பார்த்து தான் இருக்கும். நம் கண்ணில் படாது.
தீ அணைப்பான் மாட்டியிருக்கும் இடத்தின் அருகிலேயே ஒரு பேப்பரில் தெளிவாக பிரிண்ட் எடுத்து மாற்ற வேண்டிய தேதியை பெரிதாக போட்டு வையுங்கள். கண்டிப்பாக நமது கண்ணில் பட்டு கொண்டே இருக்கும் ஒரு வாரத்திற்கு முன்னால் சம்பத்தப்பட்ட நபரை அழைத்து மாற்றி விடலாம் (Refil).

ஒரு சதவீத முன்னேற்றம் 10
உங்கள் வீட்டில் ஒரு மார்க்கர் போர்டு Marker Board வாங்கி மாட்டி விடுங்கள்.
அதில் கீழ்கண்ட விஷயங்கள் எழுதி வாருங்கள்
Driving Licence Renewal Date
Car /Bike Insurance Renewal Date
Inverter Next Service due date:
Mobile Recharge/Bill date:
Credit Card due date:
Internet bill date:
Your weight (Last checked) with date
Your last TT injection date:
Marriage/Reception date for that month
Other dues/receivables

ஒரு சதவீத முன்னேற்றம்: 11
கல்யாண பத்திரிகைகளை திருமணம் முடிந்த பின் அப்படியே தூக்கி எரிந்து விடாதீர்கள்.
அதில் அழகாக ஒரு மொய் கவர் தயாரிக்கலாம்
நான் இதை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன்.
கலர் கலர் மொய் கவராக என்னிடத்தில் இருந்து வரும்

ஒரு சதவீத முன்னேற்றம் 12
ரெடிமேட் சட்டை வாங்கும் பொழுது அதன் நடுவில் ஒரு அட்டை வைத்திருப்பார்கள். அதை பத்திரமாக வைத்திருங்கள்.
அடுத்தமுறை வெளியூர் செல்லும் பொழுது டிரஸ் எடுத்து செல்லும் பொழுது சட்டை கசங்காமல் இருக்க இந்த அட்டையை சட்டைக்கு நடுவில் வைத்து எடுத்து செல்லுங்கள்

ஒரு சதவீத முன்னேற்றம் 13
செய்தித்தாள்களில் நடுவில் விளம்பர நோட்டிசுகள் வரும்.
அதில் thick ஆன பேப்பரில் உள்ள விளம்பர நோட்டீசை நான்காக கத்தரித்து உங்கள் குளியல் அறையில் வைத்துவிடுங்கள்.
குளித்து விட்டு வரும் பொழுது தண்ணீர் வெளியே செல்லும் வழியில் பில்டரில் அடைத்து கொண்டு இருக்கும் முடிகளை இந்த காகிகத்தில் எடுத்து அப்படியே குப்பை தொட்டியில் போட வசதியாக இருக்கும்.
இல்லையெனில் இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம் என சேர்ந்து கொண்டே போகும்.
உங்கள் பாத்ரூம் பளிச்சென்று இருக்கவேண்டும். அது முக்கியம்.
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அதில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று பரவலாக ஒரு கருத்து உள்ளது. அதை கருத்தை உடையுங்கள்
சொந்த வீட்டுக்காரர்கள் வேறு வழியில்லை
நீங்கள் தான் சுத்தமாக பளிச்சென்று வைத்து கொள்ள வேண்டும்

ஒரு சதவீத முன்னேற்றம் 14
ஏதாவது கூட்டத்திற்கு செல்லும் பொழுது உங்களிடம் சிலர் விசிடிங் கார்டு களை கொடுப்பார்கள். அதில் அந்த கூட்டத்தின் பெயர், இடம், தேதி போன்றவற்றை பின்புறம் எழுதி வையுங்கள்.
பிற்காலத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது இந்த கூட்டத்தை நினைவு கூர்ந்து தொடர்பு கொள்ளலாம்.

ஒரு சதவீத முன்னேற்றம் 15
உங்கள் டேபிளில் இருக்கும் பேனாக்களை எடுத்து எழுதுகிறதா என்று சரி பாருங்கள்.
எழுதாத பேனாக்களை இப்பொழுதே தூக்கி எறியுங்கள்.
எழுதுகிற பேனாக்கள் மட்டும் தான் அங்கு இருக்க வேண்டும்.
அது மியூசியம் அல்ல

ஒரு சதவீத முன்னேற்றம் 17
மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கும் பொழுது சில சமயம் தரும் இரண்டு மூன்று மாத்திரைகளின் வெளிப்புற பேக்கிங் கவரில் அதன் காலாவதி தேதி நமக்கு கொடுத்து பகுதியில் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.
அப்பொழுதே கடைக்காரரிடம் சரி பார்த்து அவர் தரும் கவர் மேலே எழுது வைத்து கொள்ளுங்கள்.
நாம் அநேகமாக அதனை மாத்திரையையும் சாப்பிட போவதில்லை. சற்று குணமானவுடன் மாத்திரை சாப்பிடுவதை விட்டு விடுவோம். ஆனால் அந்த மாத்திரை எப்போது காலாவதி ஆகும் என்று தெரியாமல் வைத்திருந்து என்ன புரயோஜனம் ?

ஒரு சதவீத முன்னேற்றம் 18
உங்கள் வீட்டின் வெளி கதவின் மற்றும் கேட் ஒரு சாவியை நம்பிக்கையான நண்பர்கள் வீட்டிலோ அல்லது உறவினர் வீட்டிலோ கொடுத்து வையுங்கள். அவசர தேவைக்கு பயன்படுத்தலாம்.
அப்படி கொடுக்கும் பொழுது அதனுடன் உங்கள் பெயரை ஒரு பேப்பர் ஸ்லிப் பில் எழுதி கொடுத்து வையுங்க. தேடும்பொழுது இது தான் உங்கள் மாற்று சாவி என்று உடனடியாக கிடைக்கும்.
இல்லெயெனில் அனைத்து சாவிகளுடன் இரண்டற கலந்துவிடும்

ஒரு சதவீத முன்னேற்றம் 19/100
நீங்கள் செய்தித்தாள் வாங்குபவரா ?
மாதாமாதம் சில செய்தித்தாள்களில் அந்த மாதத்தின் மொத்த பில் தொகை எவ்வளவு என்று போட்டிருப்பார்கள். உங்கள் செய்திதாள் போடும் நபர் அதே தொகை வாங்குகிறாரா என்று சரி பார்க்க முடியும்.
சேவைக்கட்டணமாக சில நபர்கள் ஒரு செய்தித்தாளுக்கு 30 ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள்
சந்தா கட்டியிருந்தால் இது உங்களுக்கு அல்ல

ஒரு சதவீத முன்னேற்றம் 20/100
வங்கிகளிலோ அல்லது மற்ற இணையத்தளத்திலோ அடிக்கடி பாஸ் வோர்ட் மாற்ற சொல்லுவார்கள்.முன்பு போட்டிருந்த அதே
பாஸ் வோர்ட் அனுமதிக்காது.
இதை எளிதாக்க ஒரு ஆலோசனை
முதலில்
1alliswell
என்று போடுங்கள்
அடுத்தமுறை
2alliswell
என்று போடுங்கள்
அடுத்த முறை
3alliswell
என்று போடுங்கள்
நடுவில் ஏதாவது ஒரு ஸ்பெஷல் கேரக்டர் போடுங்கள்
உதாரணம்
1all@iswell
2all@iswell
3all@iswell
அடுத்த அடுத்த நம்பராக போட்டு வரும்பொழுது மறந்து போகாது

ஒரு சதவீத முன்னேற்றம் 21/100
இணைய தளத்தை உபயோகிக்க ஆரம்பித்த பின் பலவேறு தளங்களில்
பல்வேறு பாஸ்வோர்ட் உபயோகிக்கிறோம்
இதை எல்லாவற்றையும் ஒரு டயரியில் எழுதி வைத்து வாருங்கள் 
நமது ஞாபக சக்தியை நம்பி இருக்க வேண்டாம்.

ஒரு சதவீத முன்னேற்றம் 22/100
வீட்டில் நாம் செய்து வரும் செலவுகளை ஒரு டயரியில் எழுதி வாருங்கள்.
நாம் எவ்வளவு செய்து வருகிறோம். இன்னும் கையிருப்பு எவ்வளவு இருக்கிறது என்று ஒரு கணக்கு தெரியும். அதற்கேற்றாற்போல் நாம்
சுருக்கி கொள்ளலாம்.
பழைய விஷயங்களை தேடுவதற்கு எளிதாக இருக்கும்.

ஒரு சதவீத முன்னேற்றம் 23/100
உங்கள் காரை பார்க் செய்யும் பொழுது உங்கள் மொபைல் போன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி முன் பக்க கண்ணாடியில் வெளியே தெரியும்படி வைத்து விடுங்கள்.
உங்கள் கார் யாருக்கேனும் தொந்தரவாக இருந்தால் உங்களுக்கு போன் செய்வார்கள்
அப்படி உங்கள் மொபைல் போன் நம்ப எழுதிய ஒரு பேப்பரை எப்பொழுதும் காரில் வைத்திருங்கள்.
நான் இதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன். மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் உதவுவோம்

ஒரு சதவீத முன்னேற்றம் 24/100
உபயோகப்படுத்தாத மொபைல் போன் மற்றும் மற்ற பொருட்களில் இருந்து பேட்டரிகளை கழட்டி வையுங்கள் அப்படியே இருந்தால் கசிந்து அதிலுள்ள ரசாயனம் பொருளை கெடுத்து விடும்.

ஒரு சதவீத முன்னேற்றம் 25/100
வெளியூர் செல்லும் பொழுது சந்திக்க போகும் நபர் ஹோட்டல் மற்றும் டாக்ஸி டிரைவர் மொபைல் நம்பர் அனைத்தையும் ஒரு தனி காகிகத்தில் எழுதி கொண்டு செல்லுங்கள். உங்கள் மொபைல் பேட்டரி சார்ஜ் இல்லாமல் போகலாம்.
சந்திக்க வேண்டிய நபர், இடம் தொடர்பு எங்கள் உங்களுக்கு தேவைப்படும்.
அந்த தகவல்களை மின்னஞ்சிலும் சேமித்து வைத்து விட்டு செல்லுங்கள் .

ஒரு சதவீத முன்னேற்றம் 26/100
உங்கள் உறவில் வயதானவர்கள் இருந்தால் அடிக்கடி போன் மூலம் தொடர்பு கொண்டு பேசுங்கள். இருக்கும்பொழுது உங்கள் உறவை நிலை நாட்டுங்கள்.
நெருங்கிய சொந்தமாக இருந்தால் வீடியோ கால் மூலம் பேசுங்கள். சந்தோசப்படட்டும். (ஊர் பேர் தெரியாதவனிடம் எல்லாம் வீடியோ போட்டு பேசுகிறோம். உறவினர்களிடத்து ஏன் பேசக்கூடாது )

ஒரு சதவீத முன்னேற்றம் 27/100
உங்கள் மின்னஞ்சல் கணக்கில் Train tickets, Air tickets என்று தனி தனியாக Folder ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
டிக்கெட் பதிந்தவுடன் வரும் மின்னஞ்சலை அந்த போல்டருக்கு மாற்றி விடுங்கள்.
தேடுவது சுலபமாக இருக்கும்.

ஒரு சதவீத முன்னேற்றம் 28/100
கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டில் ஏதாவது பில் போட்டு அது கணக்கில் கழிக்கப்பட்டு பிறகு அந்த பரிவர்த்தனை Decline ஆகி இருந்தால்
சாதாரணமாக ஓரிரு நாளில் மீண்டும் உங்கள் கணக்கில் வரவு வந்து விடும்.
அடிக்கடி நமக்கு நேர வாய்ப்பு இருக்கிறது. நமக்கு இருக்கிற அவசர யுகத்தில் இதை சரிபார்க்க மறந்து விடலாம். நமக்கு தான் வாட்ஸாப்ப்பும் முகநூலுமே சரியாக இருக்கிறதே
இது போல Decline ஆன தகவல்களை உடனடியாக கம்ப்யூட்டரில் ஒரு Excel பைலை தொடங்கி போட்டு வாருங்கள் அவைகளை கண்காணிக்க வசதியாக இருக்கும்

ஒரு சதவீத முன்னேற்றம் 29/100
உங்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுடன் ஒரு துண்டு சீட்டில் 1234 அல்லது ஏதாவது ஒரு நாலு நம்பரை கிறுக்கி வைத்து விடுங்கள்.
தொலைந்து போனால் அதை கண்டு எடுப்பவன் அந்த நம்பரையே தொடர்ந்து போடுவான். நான்காவது முறை கார்டு பிளாக் செய்யப்படும்.
நமது பணம் பத்திரமாக இருக்கும்.
ஆனால் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் ஏதாவது ஒரு நான்கு நம்பர் தான். உங்கள் PIN நம்பர் அல்ல.
இன்னும் சற்று புத்திசாலித்தனமாக செய்யலாம்.
ஒரு நான்கு நம்பரை எழுதி லேசாக அடித்து விட்டு வேறு நான்கு நம்பரை எழுதி வைத்து விடுங்கள். எடுப்பவன் மெண்டல் ஆகிப்போகட்டும்


Sunday, April 15, 2018

Happiness 2

மற்றவர்களின் சந்தோஷங்கள் உங்களுக்கு பொறாமையை உண்டு பண்ணுகிறது எனில் நீங்கள் சந்தோஷமாக இல்லை என்று அர்த்தம்.

Comments by others

If you are commented by just two people, that doesn't mean that they are representing the whole world.
Those two people are not in your wave length. That's all.
That will not have any impact on your life because you are not depending on others.
You are depending your skills and knowledge. Develop more.

Play your part

Many people played a part in your life.
Helped a lot in your life to come up.

You may be able to anything back to the same old persons.
But you can pass it on.

Pass it one some new persons.

Happiness

Happiness

There is no way to happiness.
Happiness is the WAY to happiness

Saturday, September 10, 2016

நீங்கள் சக்திமான்

                                                                  நீங்கள் சக்திமான்


பல சரித்திர கதைகளை படிக்கிறோம்.  தொலை காட்சிகளில் வெற்றி பெறுபவர்களை பார்க்கிறோம்.   நம் கண் முன்னேயே பல சாதனையாளர்களை பார்க்கிறோம். நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. நம்மை போலதானே இருக்கிறார்கள். எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தார்கள் ? எது அவர்களை வெற்றிப்படிகளில் கொண்டு சென்றது ? நான் ஏன் சராசரி மனிதனாக மாணவனாக இருக்கிறேன் ? நான் வெற்றி பெற வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும். ஊர் என் பேர் சொல்ல வேண்டும் எனில் இப்பொழுது இருப்பது போல இருந்தால் சத்தியமாக அது கிடைக்காது. என்னுடைய செயல் முறையை மாற்ற வேண்டும். ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

வெற்றி பெற்றவர்களிடம் இருக்கும் சக்தி என்னிடம் இருக்கிறதா ? என்னிடம் தன்னம்பிக்கை குறைந்து இருக்கிறதா ? நான் சக்தி மிக்கவனா இல்லையா ?

ஒன்று சொன்னால் நீங்கள் திகைத்து போவீர்கள். நீங்கள் ஒருவரிடம் சண்டையிட்டு ஜெயித்தால் நீங்கள் சந்தோஷபடுவீர்கள் தானே. பத்து பேரிடம் போட்டியிட்டு ஜெயித்தால் நீங்கள் பெருமைபடுவீர்கள் தானே. ஓராயிரம் பேரிடம் போட்டியிட்டு ஜெயித்தால் பெருமிதம் கொள்வீர்கள் அல்லவா ? ஒரு லட்சம் பேரை ஜெயித்தால், ஐயோ உங்களை கையிலே பிடிக்கவே முடியாதே. பத்து லட்சம் பேரை ஜெயித்தால், என்ன பத்து லட்சம் பேரா? ஆமாம் பத்து லட்சம் பேரை ஜெயித்தால் நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்தானே. " அதிலென்ன சந்தேகம் " என்று நீங்கள் சொல்லலாம். பிறக்கும் போதே கிட்டத்தட்ட 700 மில்லியன் போட்டியாளர்களை வென்றவர் நீங்கள். உன்னுடன்  உருவான 700 மில்லியன் உயிருணுக்களில் உனக்கு மட்டும் தான் உயிர் கிடைத்தது.நீ மட்டும் ஜெயித்த உயிரணு. மற்றவை அந்த போட்டியில் தோற்று விட்டன.  உனது பிறப்பே ஒரு வெற்றியின் அறிகுறி. உனது வாழ்வின் தொடக்கமே ஒரு வெற்றியின் சகாப்தத்தின் ஆரம்பம் அல்லவா ? வாழ்க்கை முழுவதும் வெற்றியை அடுக்கிக் கொண்டு போக வேண்டிய ஆள் அல்லவா நீங்கள் ? வெற்றியை பழக்கம் ஆக்கி கொள்ள வேண்டிய ஆள் நீங்கள். ஆனால் நீங்கள் இப்போது எங்கு இருக்கிறீர்கள் ? நீங்கள் சக்திமான் என்பதை புரியாமலே வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களால் பல விஷயங்களை சாதிக்க முடியும் என உணராமலே வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். வாருங்கள். வாழ்க்கையை மாற்றுவோம். நீங்கள் உங்களது முழு சக்தியை திறமையை உபயோகப் படுத்த அடுத்த முயற்சியை எடுப்போம். நீங்கள் வெற்றி பெற்றே தீர வேண்டும். ஏனெனில் நீங்கள் வெற்றி பெறுவதற்கே அவதாரம் எடுத்தவர்கள். வாருங்கள் வெற்றி பயணத்தை ஆரம்பிப்போம்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக திகழ வேண்டும் என்று ஆசை வைத்திருக்கிறோம். ஆனால் அந்த ஆசையை நிறைவேற்ற அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் நமக்கு ஒரு சுணக்கம். அவ்வளவுதான். அந்த கட்டத்திலேயே நின்று கொண்டே இருக்கிறோம். மற்றவர்கள்  வெற்றி பெறுவதை பார்த்து கொண்டே இருக்கிறோம்.  மற்றவர்கள் வெற்றிகளை பார்ப்பதற்கா நாம் பிறந்து இருக்கிறோம் ?

வெற்றி பெற்றவர்கள் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்ய பட்டது. அதில் முக்கியமான சில விஷயங்கள் நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். அவர்களில் 94 சத வீதம் பேர் தொலை காட்சி பார்ப்பதே இல்லையாம். 6 சத வீத பேர் ஒரு நாளைக்கு 10 நிமிடம் மட்டும் தான் பார்ப்பார்களாம். சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்டியில்  "நான் கிரிக்கட் தவிர மற்ற விஷயங்களை பார்ப்பதில்லை” கூறியிருக்கிறார்  அவர்கள் அவர்களது இலக்கில் மிக தெளிவாக இருந்திருக்கிறார்கள். அவர்களும் கிடைக்கும் நேரம் தொலைக்காட்சி பார்த்துகொண்டு இருந்திருந்தால் அவர்கள் சராசரி மனிதனாகத்தான் இருந்திப்பார்கள்.
சரி.  நம்மை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போக விடாமல் தடுத்து கொண்டு இருப்பது  யார் ?  நாமே தான். நமக்கு எதிரி நாமே தான். எது தடுத்து கொண்டு இருக்கிறது ? ரிஸ்க் எடுக்க துணிவில்லை. அந்த மனப்பான்மை தான் காரணம். ஏன் எனில் இன்று நீங்கள் சுகமான ஒரு வாழ்க்கையை அனுபவித்து கொண்டு இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் செய்து கொண்டு இருக்கும் செயல்கள் தவிர மற்ற எதையும் நீங்கள் செய்ய தயாராக இல்லை.

இதை  ஆங்கிலத்தில் Comfort Zone என்று சொல்லுவோம். புதியதாக ஏதாவது செய்ய வேண்டும் என்றால் முதலில் கற்று கொள்ள வேண்டும். முயற்சி எடுக்க வேண்டும். உழைத்திட வேண்டும். பணம், நேரம், சக்தி செலவழிக்க வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக இல்லை.
ஒன்றுமே செய்யாமல் வெற்றி மட்டும் கிடைக்க வேண்டும் என்னால், அது என்ன மாயா ஜாலமா ? 

ஒரு மனிதன் ஒரு வெட்டவெளி மைதானத்தை பார்த்து புலம்பிக் கொண்டு இருந்தார். அருகில் வந்த மற்றொருவர் அவரைப் பார்த்து 'என்ன விஷயம் ?' என கேட்டார். அதற்க்கு 'விளைச்சலே வர வில்லை' என கூறினார். 'என்ன இந்த வெட்டவெளியிலா விளைச்சல் வர வில்லை ? என்ன விதை போட்டீர்கள் ? அதற்கு முன்னால் உழுதீர்களா ? தரமான உரம் போட்டீர்களா ? இதையெல்லாம் செய்தது போலவே தெரியவில்லையே'.  'ஓ ! அதையெல்லாம் செய்ய வேண்டுமா ?' என பதிலளித்தார்.  இப்பொழுது சொல்லுங்கள். வாழ்க்கையில் வெற்றிக்கான என்ன என்ன விதைகள் போட்டுள்ளீர்கள் விளைச்சலை எதிர்பார்ப்பதற்கு ? விதைகளை போடாமல் விளைச்சலை எதிபார்ப்பதில்   என்ன நியாயம் ?  விதைகள் போட வேண்டியது உங்கள் கடமை. அதை விளைச்சலாக்க தொடர்ந்து சில முயற்சிகள், செயல்கள் செய்ய வேண்டியதிருக்கும். உலக உண்மை என்னவெனில் ' விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை'

சரியான விதைகள், சரியான உரம், சரியான உழைப்பு, எனில் சரியான அறுவடையை நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் தயாரா ? உங்கள் வெற்றிக்கு வழி நடத்த நாங்கள் தயார். உறுதுணையாய் இருக்க நாங்கள் தயார். நீங்கள் வெற்றிக்கான பாதையில் பயணம் செய்ய தயாரா ? வாருங்கள் வானத்தை வசப்படுத்துவோம்.



Thursday, March 03, 2016

வாழ்க்கையில் மகிழ்ச்சி

வாழ்க்கையில் மகிழ்ச்சி

வீட்டை விட்டு கிளம்பி அலுவலகத்திற்கு வருகிறோம். வழியில் பார்ப்பவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா ? அலுவலகத்திற்க்கு உள்ளே செல்கிறோம். எதிரில் வருபவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்களா ? காலை முதல் இரவு வரை நாம் சந்திக்கும் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்களா ?
10 சதவீத மக்கள் சந்தோஷமாக இருந்தால் மிக்க சந்தோஷம்.
90 சதவீத மக்கள் சந்தோஷமாக இல்லை. ஏன் இல்லை ?
அட  நாமும் சந்தோஷமாக இருக்க முடிகிறதா ? பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறோமா அல்லது சந்தோஷத்தை உணர்கிறோமா ? வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்க பிறந்தவர்கள். எங்கே தொலைத்தோம் ?
ஒரு முறை தங்கள் கல்லூரி பேராசிரியரைப் ப் பார்க்க பழைய மாணவர்கள்  வந்திருந்தனர்.வாழ்க்கையின் டென்ஷன் மற்றும் மன அழுத்தங்களைப் பற்றி பேச்சு வந்தது. ப்ரொஃபஸர் அடுக்களைக்குப் போய் காஃபி போட்டுக் கொண்டு அதை விதவிதமான கோப்பைகளில் ஊற்றி எடுத்து வந்தார். (கிளாஸ் கப், க்ரிஸ்டல் கப், பளபளக்கும் பீங்கான், சில சாதாரண கோப்பைகள், சில நிறம் மங்கிய கப்புகள், சில மிக விலை உயர்ந்த கோப்பைகள்). எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக் கொண்டார்கள்.
பேராசிரியர் சொன்னார் - கவனித்தீர்களா? அழகான மற்றும் விலை உயர்ந்த கோப்பைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டன. சாதாரண கோப்பைகளை சீண்டுவாரில்லை. உங்கள் எல்லோருக்கும் சிறந்த கோப்பைகளே தேவைப்பட்டன.
உங்கள் டென்ஷனுக்கும் மன அழுத்தத்துக்கும் இது தான் காரணம். உங்களுக்கு காஃபி தான் தேவைப்பட்டது - கோப்பை அல்ல. ஆனாலும் சிறந்த கோப்பையையே தேர்ந்தெடுத்தீர்கள். வாழ்க்கை தான் காஃபி. நீங்கள் பார்க்கும் வேலை, பணம், ஸ்டேட்டஸ் இவையெல்லாம் கோப்பைகள். இவை வாழ்க்கையை பற்றிக்கொள்ள உதவும் உபகரணங்களே. கோப்பைகளைக் கொண்டு வாழ்க்கையெனும் நதியைக் கடக்க முயலாதீர்கள். காஃபி எனும் வாழ்க்கையை அனுபவியுங்கள்
உலகத்தில் மிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் உலகத்தில் உள்ள அத்தனை சிறந்த பொருட்களையும் வைத்திருக்கவில்லை.  இருக்கும் பொருட்களை தனக்கு கிடைத்தவைகளை  மிக சிறந்தவை என நினைத்து சந்தோஷப்படுவதால்  மட்டும் தான்.
நம்மிடம் என்ன என்ன நல்ல அம்சங்கள் இருக்கின்றன என தெரியாமலே அடுத்தவரிடம் உள்ள விஷயங்களை பார்த்து பார்த்து நமது தாழ்வு மனப்பான்மையை வளர்த்து கொண்டு இருக்கிறோம்.
மற்றவர்கள் நம்மை பாராட்ட வேண்டும் என ஏங்கி கொண்டிருக்கிறோமா ?  மற்றவர்கள் கை தட்டல்களை எதிர்பார்ப்பதை குறைத்தாலே நமக்கு நிறைய கை தட்டல்கள் வரும். புதிய ஆடை வாங்கினால் உடனே மற்றவர்களிடத்தில் காண்பித்து அவர்கள் நன்றாக இருக்கிறது என்றால் நமக்கு  சந்தோஷம். அவர்கள் ஓகே என்று சொன்னாலே நமது சந்தோஷம் போய் விடுகிறது என்றால் நமது சந்தோஷம் மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளிலா இருக்கிறது ? நமது சந்தோஷம் வெளியில் இருக்கிறதா நமக்கு உள்ளேயே இருக்கிறதா ?
நம்மை சுற்றி என்ன நடந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியுமா ?.  ஏன் முடியாது ? ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்திருக்கும்போழுது  நமக்கு   முன்னே இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று இன்று முழுவதும் நான்  சந்தோசமாக இருக்கபோகிறேன் என உறுதி எடுத்து கொள்ளலாம். அல்லது இன்று முழுவதும் உம்மணா   மூஞ்சியாக இருக்கபோகிறேன்  என நினைத்து கொள்ளலாம். அன்று முழுவதும் அப்படிதான் நடக்கபோகின்றன  நாம் தான் நமது சந்தோஷத்தை  தீர்மானித்து கொள்கிறோம். வாழ ஆசைப்படுங்கள். சந்தோஷமாக வாழ ஆசை படுங்கள்.


Sunday, April 13, 2014

List of Articles published in VITAL FLOWER/ஆளுமை சிற்பி


MONTH TOPIC
1 Mar.05 Responsibility
2 Apr.05 Self Esteem
3 May.05 HRD A gateway for success
4 Jun.05 Importance of HRD
5 Jul.05 Training - Critical Dimension of HRD
6 Aug.05 HRD Assessment & Training
7 Sep.05 Job Satisfaction I
8 Oct.05 Job Satisfaction II
9 Nov.05 Motivatation I
10 Dec.05 Motivatation II
11 Jan.06 Change Management I
12 Feb.06 Change Management II
13 Apr.06 Self Confidence I
14 May.06 Self Confidence II
15 Jun.06 Self Confidence III
16 Jul.06 Self Confidence IV
17 Aug.06 You can achieve
18 Sep.06 Failures are not failures
19 Oct.06 Attitude decides your altitude
20 Nov.06 Power of Focus
21 Dec.06 Power of Self Talk
22 Jan.07 Art of Goal Setting I
23 Feb.07 Art of Goal Setting II
24 Mar.07 Art of Goal Setting III
25 Apr.07 Art of Goal Setting IV
26 May.07 Know your key strengths I
27 June.07 Know your key strengths II
28 Jul.07 Know your key strengths III
29 Aug.07 Art of Conversation I
30 Sep.07 Art of Conversation II
31 Oct.07 Mind your mind
32 Nov.07 Overcoming Procrastination
33 Dec.07 Anger: The enemy within I
34 Jan.08 Anger: The enemy within II
35 Feb.08 Power of Positive Habits
36 Mar.08 Joy of Reading
37 Apr.08 Don't say YES when you want to say NO
38 May.08 Learn from mistakes
39 Jun.08 Winner's Mindset
40 Jul.08 Dream your success
41 Aug.08 Out of the Box Thinking
42 Sep.08 Streamline Yourself
43 Oct.08 How to accept criticism
44 Nov.08 Art of Attracting I
45 Dec.08 Art of Attracting II
46 Jan.09 Transforming Bad Habits
47 Feb.09 Importance of Soft Skills
48 Mar.09 Seven ways that win people
49 Apr.09 Want Success ? Look at your beliefs
50 May.09 How to deal with negative people
51 Jun.09 Art of Living Well
52 Jul.09 How to overcome worries
53 Aug.09 Wanted Innovation
54 Sep.09
55 Oct.09 How to be your own person
56 Nov.09 Step out of comfort zone
57 Dec.09 Maintaining Healthy Relationships
58 Jan.10 Become a person of integrity
59 Feb.10 Presentation Skills
60 Mar.10 Mind your manners 
61 Apr.10 Dining etiquette
62 May.10 Email etiquette
63 Jun.10 Social etiquette
64 Jul.10 Handling criticism
65 Aug.10 How to win respect and approval 
66 Sep.10 Best Gifts that cost nothing I
67 Oct.10 Best Gifts that cost nothing II
68 Nov,10 Seize the opportunities
69 Dec.10 How to manage Exam anxiety 
70 Jan.11 How to make the new year resolutions to work
71 Feb.11 How to motivate yourself for success 
72 Mar.11 How to deal with the people who always complain 
73 Apr.11 How to make other person listen to you
74 May.11 Aim for Lifelong happiness
75 Jun.11
76 Jul.11 Life is joy and Joy is life
77 Aug.11 Negotiation Skills
78 Sep.11 Handling lieing teenagers
79 Oct.11 Make a difference
80 Nov.11 How to conquer tough challenges in life
81 Dec.11 Power of Belief
82 Jan.12 Power of Belief 2
83 Feb.12 Know you have always choices
84 Mar.12 How well you manage yourself ?
85 Apr.12 Fears: Greatest obstacles for success 
86 May.12 Make your life a masterpiece
87 Jun.12 Why Feedbacks are important 
88 Jul.12 Be an optimistic
89 Aug.12 Art of Public Speaking
90 Sep.12 Does watching TV spoil your life ?
91 Oct.12 How important money is in your life ?
92 Nov.12 What we learnt from Gandhi ?
93 Dec.12 Art of Persuasion
94 Jan.13 change your life
95 Feb.13 Developing reading habit
96 Mar.13 Words of Encouragement
97 Apr.13 Art of being SELF
98 May.13 Develop your talents
99 Jun.13 Make everyday a Happy Day
100 Jul.13  Dream a Dream
101 Aug.13 How to become a respectable person
102 Sep.13 Accepting Imperfections
103 Oct.13
104 Nov.13 60 minutes will change your life I
105 Dec.13 60 minutes will change your life II
106 Jan.14 Inject success patterns
107 Feb.14 Life is a bundle of results
108 Mar.14 Learning good manners I
109 Apr.14 Learning good manners II
110 May.14 Are we groing internallay ?
111 Jun.14 Stand up for yourselves
112 Jul.14 Not less than 100 percent
114 Aug.14 How do you manage your emotions ?
115 Sep.14 Mother is a true leader
116 Oct.14 Climb up and stay strong
117 Nov.14 There is always more room
118 Dec.14 How to attain personal satisfaction & contentment
119 Jan.15 How to make your life amazing ?
120 Feb.15 Overcoming the fear of public speaking
121 Mar.15 Feel Happy, spread happiness
122 Apr.15 Feel Happy, spread happiness 2
123 May.15 Are you ready for the process ?
124 Jun.15 Reconnect Yourself
125 Jul.15 Power of Appreciation
126 Aug.15 Power of Personal values
127 Sep.15 Prioritize prioritizing
128 Oct.15 How to feel good about yourself ?
129 Nov.15 Why must you change your Life ?
130 Dec.15 Excellence is a choice
131 Jan.16 Meet new people
132 Feb.16 Enhance quality of life
133 Mar.16 Be the caption of your ship
134 Apr.16 Power of Thoughts
135 May.16 Power of Determination
136 Jun. 16 Do you promote yourself ?
133 Jul.16 How do you want to be remembered ?
134 Aug.16 You can heal yourself
135 Sep.16 Tame your fears
136 Oct.16 Challenge your limits
137 Nov.16 Overcoming Hopelessness
138 Dec.16 Why we resist changes ?
139 Jan.17 Recipe for Radiant Living
140 Feb.17 Create your own special place
141 Mar.17 What kind of leader are you I
142 Apr.17 What kind of leader are you II
143 May.17 What kind of leader are you III
144 Jun.17 What kind of leader are you IV
145 Jul.17 What kind of leader are you V
146 Aug.17 What kind of leader are you VI
147 Sep.17 What kind of leader are you VII
148 Oct.17 What kind of leader are you VIII
149 Nov.17 What kind of leader are you IX
150 Dec.17 What kind of leader are you X
151 Jan.18 What kind of leader are you XI
152 Feb.18 Aim for Joyful Life
153 Mar.18 Be an extra miler
154 Apr.18 Is social media derailing our life ?
155 May.18 How to look at it ?
156 Jun.18 How to take care of yourself ?
157 Jul.18 Building a positive personality
158 Aug.18 Happiness is a choice