நீங்கள் சக்திமான்
நீங்கள் சக்திமான்
பல சரித்திர கதைகளை படிக்கிறோம். தொலை காட்சிகளில் வெற்றி பெறுபவர்களை பார்க்கிறோம். நம் கண் முன்னேயே பல சாதனையாளர்களை பார்க்கிறோம்.
நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. நம்மை போலதானே இருக்கிறார்கள். எப்படி இந்த அளவிற்கு
உயர்ந்தார்கள் ? எது அவர்களை வெற்றிப்படிகளில் கொண்டு சென்றது ? நான் ஏன் சராசரி மனிதனாக
மாணவனாக இருக்கிறேன் ? நான் வெற்றி பெற வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும். ஊர் என்
பேர் சொல்ல வேண்டும் எனில் இப்பொழுது இருப்பது போல இருந்தால் சத்தியமாக அது கிடைக்காது.
என்னுடைய செயல் முறையை மாற்ற வேண்டும். ஏதாவது செய்தே ஆக வேண்டும்.
வெற்றி பெற்றவர்களிடம் இருக்கும் சக்தி என்னிடம்
இருக்கிறதா ? என்னிடம் தன்னம்பிக்கை குறைந்து இருக்கிறதா ? நான் சக்தி மிக்கவனா இல்லையா
?
ஒன்று சொன்னால் நீங்கள் திகைத்து போவீர்கள். நீங்கள்
ஒருவரிடம் சண்டையிட்டு ஜெயித்தால் நீங்கள் சந்தோஷபடுவீர்கள் தானே. பத்து பேரிடம் போட்டியிட்டு
ஜெயித்தால் நீங்கள் பெருமைபடுவீர்கள் தானே. ஓராயிரம் பேரிடம் போட்டியிட்டு ஜெயித்தால்
பெருமிதம் கொள்வீர்கள் அல்லவா ? ஒரு லட்சம் பேரை ஜெயித்தால், ஐயோ உங்களை கையிலே பிடிக்கவே
முடியாதே. பத்து லட்சம் பேரை ஜெயித்தால், என்ன பத்து லட்சம் பேரா? ஆமாம் பத்து லட்சம்
பேரை ஜெயித்தால் நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்தானே. " அதிலென்ன சந்தேகம்
" என்று நீங்கள் சொல்லலாம். பிறக்கும் போதே கிட்டத்தட்ட 700 மில்லியன் போட்டியாளர்களை
வென்றவர் நீங்கள். உன்னுடன் உருவான 700 மில்லியன்
உயிருணுக்களில் உனக்கு மட்டும் தான் உயிர் கிடைத்தது.நீ மட்டும் ஜெயித்த உயிரணு. மற்றவை
அந்த போட்டியில் தோற்று விட்டன. உனது பிறப்பே
ஒரு வெற்றியின் அறிகுறி. உனது வாழ்வின் தொடக்கமே ஒரு வெற்றியின் சகாப்தத்தின் ஆரம்பம்
அல்லவா ? வாழ்க்கை முழுவதும் வெற்றியை அடுக்கிக் கொண்டு போக வேண்டிய ஆள் அல்லவா நீங்கள்
? வெற்றியை பழக்கம் ஆக்கி கொள்ள வேண்டிய ஆள் நீங்கள். ஆனால் நீங்கள் இப்போது எங்கு
இருக்கிறீர்கள் ? நீங்கள் சக்திமான் என்பதை புரியாமலே வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
உங்களால் பல விஷயங்களை சாதிக்க முடியும் என உணராமலே வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
வாருங்கள். வாழ்க்கையை மாற்றுவோம். நீங்கள் உங்களது முழு சக்தியை திறமையை உபயோகப் படுத்த
அடுத்த முயற்சியை எடுப்போம். நீங்கள் வெற்றி பெற்றே தீர வேண்டும். ஏனெனில் நீங்கள்
வெற்றி பெறுவதற்கே அவதாரம் எடுத்தவர்கள். வாருங்கள் வெற்றி பயணத்தை ஆரம்பிப்போம்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக திகழ வேண்டும் என்று
ஆசை வைத்திருக்கிறோம். ஆனால் அந்த ஆசையை நிறைவேற்ற அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில்
நமக்கு ஒரு சுணக்கம். அவ்வளவுதான். அந்த கட்டத்திலேயே நின்று கொண்டே இருக்கிறோம். மற்றவர்கள் வெற்றி பெறுவதை பார்த்து கொண்டே இருக்கிறோம். மற்றவர்கள் வெற்றிகளை பார்ப்பதற்கா நாம் பிறந்து
இருக்கிறோம் ?
வெற்றி பெற்றவர்கள் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்ய பட்டது.
அதில் முக்கியமான சில விஷயங்கள் நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். அவர்களில் 94 சத
வீதம் பேர் தொலை காட்சி பார்ப்பதே இல்லையாம். 6 சத வீத பேர் ஒரு நாளைக்கு 10 நிமிடம்
மட்டும் தான் பார்ப்பார்களாம். சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்டியில் "நான் கிரிக்கட் தவிர மற்ற விஷயங்களை பார்ப்பதில்லை”
கூறியிருக்கிறார் அவர்கள் அவர்களது இலக்கில்
மிக தெளிவாக இருந்திருக்கிறார்கள். அவர்களும் கிடைக்கும் நேரம் தொலைக்காட்சி பார்த்துகொண்டு
இருந்திருந்தால் அவர்கள் சராசரி மனிதனாகத்தான் இருந்திப்பார்கள்.
சரி. நம்மை
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போக விடாமல் தடுத்து கொண்டு இருப்பது யார் ?
நாமே தான். நமக்கு எதிரி நாமே தான். எது தடுத்து கொண்டு இருக்கிறது ? ரிஸ்க்
எடுக்க துணிவில்லை. அந்த மனப்பான்மை தான் காரணம். ஏன் எனில் இன்று நீங்கள் சுகமான ஒரு
வாழ்க்கையை அனுபவித்து கொண்டு இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் செய்து கொண்டு இருக்கும்
செயல்கள் தவிர மற்ற எதையும் நீங்கள் செய்ய தயாராக இல்லை.
இதை ஆங்கிலத்தில்
Comfort Zone என்று சொல்லுவோம். புதியதாக ஏதாவது செய்ய வேண்டும் என்றால் முதலில் கற்று
கொள்ள வேண்டும். முயற்சி எடுக்க வேண்டும். உழைத்திட வேண்டும். பணம், நேரம், சக்தி செலவழிக்க
வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக இல்லை.
ஒன்றுமே செய்யாமல் வெற்றி மட்டும் கிடைக்க வேண்டும்
என்னால், அது என்ன மாயா ஜாலமா ?
ஒரு மனிதன் ஒரு வெட்டவெளி மைதானத்தை பார்த்து புலம்பிக்
கொண்டு இருந்தார். அருகில் வந்த மற்றொருவர் அவரைப் பார்த்து 'என்ன விஷயம் ?' என கேட்டார்.
அதற்க்கு 'விளைச்சலே வர வில்லை' என கூறினார். 'என்ன இந்த வெட்டவெளியிலா விளைச்சல் வர
வில்லை ? என்ன விதை போட்டீர்கள் ? அதற்கு முன்னால் உழுதீர்களா ? தரமான உரம் போட்டீர்களா
? இதையெல்லாம் செய்தது போலவே தெரியவில்லையே'.
'ஓ ! அதையெல்லாம் செய்ய வேண்டுமா ?' என பதிலளித்தார். இப்பொழுது சொல்லுங்கள். வாழ்க்கையில் வெற்றிக்கான
என்ன என்ன விதைகள் போட்டுள்ளீர்கள் விளைச்சலை எதிர்பார்ப்பதற்கு ? விதைகளை போடாமல்
விளைச்சலை எதிபார்ப்பதில் என்ன நியாயம்
? விதைகள் போட வேண்டியது உங்கள் கடமை. அதை
விளைச்சலாக்க தொடர்ந்து சில முயற்சிகள், செயல்கள் செய்ய வேண்டியதிருக்கும். உலக உண்மை
என்னவெனில் ' விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை'
சரியான விதைகள், சரியான உரம், சரியான உழைப்பு, எனில்
சரியான அறுவடையை நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் தயாரா ? உங்கள் வெற்றிக்கு வழி
நடத்த நாங்கள் தயார். உறுதுணையாய் இருக்க நாங்கள் தயார். நீங்கள் வெற்றிக்கான பாதையில்
பயணம் செய்ய தயாரா ? வாருங்கள் வானத்தை வசப்படுத்துவோம்.
0 Comments:
Post a Comment
<< Home