VALUE PLUS

Develop yourselves. Unleash the inner power. Be a successful person in your life. You are the designer of your life

Tuesday, April 02, 2019

ஒரு சதவீத முன்னேற்றம்

ஒரு சதவீத முன்னேற்றம் 1 :
சூப்பர் மார்க்கெட் அல்லது மால்களில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கும் பொழுது பில்லில் பொருள் வாரியாக விலையை சரி பாருங்கள்.
அதிகம் பேர் அப்படியே பைக்கு உள்ளே போட்டு விட்டு செல்கிறார்கள்.
பில் போட்ட பின் ஒரு பொருள் விட்டு போய் இருக்கலாம்
அதிக விலை போட்டிருக்கலாம்
அறிவிக்கப்பட்ட டிஸ்கவுண்ட் கிடைக்காமல் போயிருக்கலாம்
இலவச ஆபர் பொருள் தர விடுபட்டு இருக்கலாம்.
நீங்கள் சரிபார்த்து வாங்கும் நபராக மாறுங்கள்

ஒரு சதவீத முன்னேற்றம் 2:
உணவுப்பொருட்களை கடைகளில் வாங்கும் பொழுது அதன் தயாரிக்க பட்ட தேதியை சரி பாருங்கள். காலாவதி ஆவதற்கு மிக அருகில் உள்ள பொருட்களை வாங்க வேண்டாம்.
இன்னும் ஐந்து நாளில் பத்து நாளில் காலாவதி ஆகப்போகிற பொருட்களை தள்ளுபடி விலையில் விற்கலாம்.
தள்ளுபடி விலைக்காக ஆரோக்யத்தை கெடுத்துக்கொள்ளாதீர்கள்

ஒரு சதவீத முன்னேற்றம் 3:
கடையில் பிரட் வாங்கும்பொழுது அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ப்ரேட்களில் கீழே இருக்கின்ற பிரெட் தான் கடைசியாக அன்று வந்ததாக இருக்கும். அதை வாங்குங்கள். மேலே இருப்பது சீக்கிரம் காலாவதி ஆகப்போகிற பிரெட் ஆக இருக்கும்.
உதாரணம்: மேலே இருக்கும் பிரெட் நாளைக்கோ அல்லது மறுநாளோ காலாவதி ஆகும்.
கீழே இருக்கும் பிரெட் இன்னும் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் கழித்து காலாவதி ஆகும்.

ஒரு சதவீத முன்னேற்றம் 4:
பிரெட் வாங்கும் பொழுது அருகில் உள்ள பேக்கரி பிரெட் வாங்குங்கள். அன்றன்று தயாரித்து தருவார்கள். மிக மிருதுவாக இருக்கும்.
கடையில் வாங்கும் பிராண்டட் பிரெட் எல்லாம் ஷெல்ப் லைப் தாக்குபிடிப்பது போல தயாரிப்பதினால் அவ்வளவாக மிருதுவாக இருக்காது.
லோக்கல் பேக்கரி பிரட் அதிக நாள் வைத்திருக்க முடியாது. ஆனால் சுவையும் மிருதுவாக இருக்கும் தன்மையும் அதிகம்

ஒரு சதவீத முன்னேற்றம் 5
டூ வீலர் எடுத்துக்கொண்டு வெயிலில் நிறுத்தி விட்டு திரும்ப எடுத்து ஓட்டும் பொழுது சூடான சீட் நமது பின் புறத்தை ஒரு வழி பண்ணிவிடும்.
எப்பொழுதும் ஒரு பாட்டில் தண்ணீர், வண்டி பெட்டியில் எடுத்து செல்லுங்கள். அப்படி சூடான சீட்டின் மீது துணியை வைத்து தண்ணீரை விட்டு, ஒரு நிமிடம் கழித்து மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி துடைத்து விட்டு வண்டி ஓட்டுங்கள். ஜில் என்று உணருவீர்கள்.
பல வருடம் நான் கடை பிடித்து வருகிறேன்.

ஒரு சதவீத முன்னேற்றம் 6:
உங்கள் வீடு Cup Board ற்கு இரண்டு அல்லது மூன்று சாவி கொடுக்கப்பட்டிருக்கும்
இரண்டாவது சாவி எங்க இருக்கிறது ?
அநேக வீடுகளில் அதே கப் போர்டுக்கு உள்ளேயே லாக்கரில் பத்திரமாக இருக்கிறது.
உங்களுக்கு இரண்டாவது சாவி கொடுத்து என்ன பயன் ?
அதை பத்திரமாக வேறு இடத்தில வைத்திருந்தால், இந்த சாவி தொலைந்து போனாலோ அல்லது தேடும் போது கிடைக்க வில்லை என்றாலோ இரண்டாவது சாவியை எடுத்து பயன்படுத்தலாம் அல்லவா ?

ஒரு சதவீத முன்னேற்றம் 7:
குளிக்கும் பொழுது உங்களது சோப் அன்றுடன் காலி ஆகி விட்டால் நாளை புதியது எடுத்து கொள்ளலாம் என்று நினைத்து விடாதீர்கள். நாளை உள்ளே சென்ற பின் தான் ஞாபகம் வரும் சோப் இல்லையென்று..
ஆதலால் உடனடியாக அடுத்த சோப்பை எடுத்து உள்ளே வைத்து விடுங்கள்

ஒரு சதவீத முன்னேற்றம் 8 :
உங்கள் ஆதார் கார்டை Xerox எடுக்க போகும்பொழுது
முதலில் ஒரு நகல் எடுங்கள். மிக தெளிவாக இருந்தால் மேலும் இரண்டு, மூன்று நகல்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில் ஆதார் கார்டில் உள்ள போட்டோ நாம்தானா என்று நமக்கே சந்தேகம் வரும். தெளிவாக எடுக்கும் xerox பல நகல்கள் எடுத்துக்கொண்டால் நல்லது. அவசரத்திற்கு ஓடி அலைய வேண்டாம்.

ஒரு சதவீத முன்னேற்றம் 9
உங்கள் அலுவலகத்தில் உள்ள தீ அணைப்பான் கருவியில் உள்ள பௌடரை எப்பொழுது மாற்ற வேண்டும் என்று ஒரு லேபலில் போட்டிருப்பார்கள். (Expirty Date) அது அநேகமாக சுவரை பார்த்து தான் இருக்கும். நம் கண்ணில் படாது.
தீ அணைப்பான் மாட்டியிருக்கும் இடத்தின் அருகிலேயே ஒரு பேப்பரில் தெளிவாக பிரிண்ட் எடுத்து மாற்ற வேண்டிய தேதியை பெரிதாக போட்டு வையுங்கள். கண்டிப்பாக நமது கண்ணில் பட்டு கொண்டே இருக்கும் ஒரு வாரத்திற்கு முன்னால் சம்பத்தப்பட்ட நபரை அழைத்து மாற்றி விடலாம் (Refil).

ஒரு சதவீத முன்னேற்றம் 10
உங்கள் வீட்டில் ஒரு மார்க்கர் போர்டு Marker Board வாங்கி மாட்டி விடுங்கள்.
அதில் கீழ்கண்ட விஷயங்கள் எழுதி வாருங்கள்
Driving Licence Renewal Date
Car /Bike Insurance Renewal Date
Inverter Next Service due date:
Mobile Recharge/Bill date:
Credit Card due date:
Internet bill date:
Your weight (Last checked) with date
Your last TT injection date:
Marriage/Reception date for that month
Other dues/receivables

ஒரு சதவீத முன்னேற்றம்: 11
கல்யாண பத்திரிகைகளை திருமணம் முடிந்த பின் அப்படியே தூக்கி எரிந்து விடாதீர்கள்.
அதில் அழகாக ஒரு மொய் கவர் தயாரிக்கலாம்
நான் இதை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன்.
கலர் கலர் மொய் கவராக என்னிடத்தில் இருந்து வரும்

ஒரு சதவீத முன்னேற்றம் 12
ரெடிமேட் சட்டை வாங்கும் பொழுது அதன் நடுவில் ஒரு அட்டை வைத்திருப்பார்கள். அதை பத்திரமாக வைத்திருங்கள்.
அடுத்தமுறை வெளியூர் செல்லும் பொழுது டிரஸ் எடுத்து செல்லும் பொழுது சட்டை கசங்காமல் இருக்க இந்த அட்டையை சட்டைக்கு நடுவில் வைத்து எடுத்து செல்லுங்கள்

ஒரு சதவீத முன்னேற்றம் 13
செய்தித்தாள்களில் நடுவில் விளம்பர நோட்டிசுகள் வரும்.
அதில் thick ஆன பேப்பரில் உள்ள விளம்பர நோட்டீசை நான்காக கத்தரித்து உங்கள் குளியல் அறையில் வைத்துவிடுங்கள்.
குளித்து விட்டு வரும் பொழுது தண்ணீர் வெளியே செல்லும் வழியில் பில்டரில் அடைத்து கொண்டு இருக்கும் முடிகளை இந்த காகிகத்தில் எடுத்து அப்படியே குப்பை தொட்டியில் போட வசதியாக இருக்கும்.
இல்லையெனில் இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம் என சேர்ந்து கொண்டே போகும்.
உங்கள் பாத்ரூம் பளிச்சென்று இருக்கவேண்டும். அது முக்கியம்.
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அதில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று பரவலாக ஒரு கருத்து உள்ளது. அதை கருத்தை உடையுங்கள்
சொந்த வீட்டுக்காரர்கள் வேறு வழியில்லை
நீங்கள் தான் சுத்தமாக பளிச்சென்று வைத்து கொள்ள வேண்டும்

ஒரு சதவீத முன்னேற்றம் 14
ஏதாவது கூட்டத்திற்கு செல்லும் பொழுது உங்களிடம் சிலர் விசிடிங் கார்டு களை கொடுப்பார்கள். அதில் அந்த கூட்டத்தின் பெயர், இடம், தேதி போன்றவற்றை பின்புறம் எழுதி வையுங்கள்.
பிற்காலத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது இந்த கூட்டத்தை நினைவு கூர்ந்து தொடர்பு கொள்ளலாம்.

ஒரு சதவீத முன்னேற்றம் 15
உங்கள் டேபிளில் இருக்கும் பேனாக்களை எடுத்து எழுதுகிறதா என்று சரி பாருங்கள்.
எழுதாத பேனாக்களை இப்பொழுதே தூக்கி எறியுங்கள்.
எழுதுகிற பேனாக்கள் மட்டும் தான் அங்கு இருக்க வேண்டும்.
அது மியூசியம் அல்ல

ஒரு சதவீத முன்னேற்றம் 17
மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கும் பொழுது சில சமயம் தரும் இரண்டு மூன்று மாத்திரைகளின் வெளிப்புற பேக்கிங் கவரில் அதன் காலாவதி தேதி நமக்கு கொடுத்து பகுதியில் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.
அப்பொழுதே கடைக்காரரிடம் சரி பார்த்து அவர் தரும் கவர் மேலே எழுது வைத்து கொள்ளுங்கள்.
நாம் அநேகமாக அதனை மாத்திரையையும் சாப்பிட போவதில்லை. சற்று குணமானவுடன் மாத்திரை சாப்பிடுவதை விட்டு விடுவோம். ஆனால் அந்த மாத்திரை எப்போது காலாவதி ஆகும் என்று தெரியாமல் வைத்திருந்து என்ன புரயோஜனம் ?

ஒரு சதவீத முன்னேற்றம் 18
உங்கள் வீட்டின் வெளி கதவின் மற்றும் கேட் ஒரு சாவியை நம்பிக்கையான நண்பர்கள் வீட்டிலோ அல்லது உறவினர் வீட்டிலோ கொடுத்து வையுங்கள். அவசர தேவைக்கு பயன்படுத்தலாம்.
அப்படி கொடுக்கும் பொழுது அதனுடன் உங்கள் பெயரை ஒரு பேப்பர் ஸ்லிப் பில் எழுதி கொடுத்து வையுங்க. தேடும்பொழுது இது தான் உங்கள் மாற்று சாவி என்று உடனடியாக கிடைக்கும்.
இல்லெயெனில் அனைத்து சாவிகளுடன் இரண்டற கலந்துவிடும்

ஒரு சதவீத முன்னேற்றம் 19/100
நீங்கள் செய்தித்தாள் வாங்குபவரா ?
மாதாமாதம் சில செய்தித்தாள்களில் அந்த மாதத்தின் மொத்த பில் தொகை எவ்வளவு என்று போட்டிருப்பார்கள். உங்கள் செய்திதாள் போடும் நபர் அதே தொகை வாங்குகிறாரா என்று சரி பார்க்க முடியும்.
சேவைக்கட்டணமாக சில நபர்கள் ஒரு செய்தித்தாளுக்கு 30 ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள்
சந்தா கட்டியிருந்தால் இது உங்களுக்கு அல்ல

ஒரு சதவீத முன்னேற்றம் 20/100
வங்கிகளிலோ அல்லது மற்ற இணையத்தளத்திலோ அடிக்கடி பாஸ் வோர்ட் மாற்ற சொல்லுவார்கள்.முன்பு போட்டிருந்த அதே
பாஸ் வோர்ட் அனுமதிக்காது.
இதை எளிதாக்க ஒரு ஆலோசனை
முதலில்
1alliswell
என்று போடுங்கள்
அடுத்தமுறை
2alliswell
என்று போடுங்கள்
அடுத்த முறை
3alliswell
என்று போடுங்கள்
நடுவில் ஏதாவது ஒரு ஸ்பெஷல் கேரக்டர் போடுங்கள்
உதாரணம்
1all@iswell
2all@iswell
3all@iswell
அடுத்த அடுத்த நம்பராக போட்டு வரும்பொழுது மறந்து போகாது

ஒரு சதவீத முன்னேற்றம் 21/100
இணைய தளத்தை உபயோகிக்க ஆரம்பித்த பின் பலவேறு தளங்களில்
பல்வேறு பாஸ்வோர்ட் உபயோகிக்கிறோம்
இதை எல்லாவற்றையும் ஒரு டயரியில் எழுதி வைத்து வாருங்கள் 
நமது ஞாபக சக்தியை நம்பி இருக்க வேண்டாம்.

ஒரு சதவீத முன்னேற்றம் 22/100
வீட்டில் நாம் செய்து வரும் செலவுகளை ஒரு டயரியில் எழுதி வாருங்கள்.
நாம் எவ்வளவு செய்து வருகிறோம். இன்னும் கையிருப்பு எவ்வளவு இருக்கிறது என்று ஒரு கணக்கு தெரியும். அதற்கேற்றாற்போல் நாம்
சுருக்கி கொள்ளலாம்.
பழைய விஷயங்களை தேடுவதற்கு எளிதாக இருக்கும்.

ஒரு சதவீத முன்னேற்றம் 23/100
உங்கள் காரை பார்க் செய்யும் பொழுது உங்கள் மொபைல் போன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி முன் பக்க கண்ணாடியில் வெளியே தெரியும்படி வைத்து விடுங்கள்.
உங்கள் கார் யாருக்கேனும் தொந்தரவாக இருந்தால் உங்களுக்கு போன் செய்வார்கள்
அப்படி உங்கள் மொபைல் போன் நம்ப எழுதிய ஒரு பேப்பரை எப்பொழுதும் காரில் வைத்திருங்கள்.
நான் இதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன். மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் உதவுவோம்

ஒரு சதவீத முன்னேற்றம் 24/100
உபயோகப்படுத்தாத மொபைல் போன் மற்றும் மற்ற பொருட்களில் இருந்து பேட்டரிகளை கழட்டி வையுங்கள் அப்படியே இருந்தால் கசிந்து அதிலுள்ள ரசாயனம் பொருளை கெடுத்து விடும்.

ஒரு சதவீத முன்னேற்றம் 25/100
வெளியூர் செல்லும் பொழுது சந்திக்க போகும் நபர் ஹோட்டல் மற்றும் டாக்ஸி டிரைவர் மொபைல் நம்பர் அனைத்தையும் ஒரு தனி காகிகத்தில் எழுதி கொண்டு செல்லுங்கள். உங்கள் மொபைல் பேட்டரி சார்ஜ் இல்லாமல் போகலாம்.
சந்திக்க வேண்டிய நபர், இடம் தொடர்பு எங்கள் உங்களுக்கு தேவைப்படும்.
அந்த தகவல்களை மின்னஞ்சிலும் சேமித்து வைத்து விட்டு செல்லுங்கள் .

ஒரு சதவீத முன்னேற்றம் 26/100
உங்கள் உறவில் வயதானவர்கள் இருந்தால் அடிக்கடி போன் மூலம் தொடர்பு கொண்டு பேசுங்கள். இருக்கும்பொழுது உங்கள் உறவை நிலை நாட்டுங்கள்.
நெருங்கிய சொந்தமாக இருந்தால் வீடியோ கால் மூலம் பேசுங்கள். சந்தோசப்படட்டும். (ஊர் பேர் தெரியாதவனிடம் எல்லாம் வீடியோ போட்டு பேசுகிறோம். உறவினர்களிடத்து ஏன் பேசக்கூடாது )

ஒரு சதவீத முன்னேற்றம் 27/100
உங்கள் மின்னஞ்சல் கணக்கில் Train tickets, Air tickets என்று தனி தனியாக Folder ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
டிக்கெட் பதிந்தவுடன் வரும் மின்னஞ்சலை அந்த போல்டருக்கு மாற்றி விடுங்கள்.
தேடுவது சுலபமாக இருக்கும்.

ஒரு சதவீத முன்னேற்றம் 28/100
கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டில் ஏதாவது பில் போட்டு அது கணக்கில் கழிக்கப்பட்டு பிறகு அந்த பரிவர்த்தனை Decline ஆகி இருந்தால்
சாதாரணமாக ஓரிரு நாளில் மீண்டும் உங்கள் கணக்கில் வரவு வந்து விடும்.
அடிக்கடி நமக்கு நேர வாய்ப்பு இருக்கிறது. நமக்கு இருக்கிற அவசர யுகத்தில் இதை சரிபார்க்க மறந்து விடலாம். நமக்கு தான் வாட்ஸாப்ப்பும் முகநூலுமே சரியாக இருக்கிறதே
இது போல Decline ஆன தகவல்களை உடனடியாக கம்ப்யூட்டரில் ஒரு Excel பைலை தொடங்கி போட்டு வாருங்கள் அவைகளை கண்காணிக்க வசதியாக இருக்கும்

ஒரு சதவீத முன்னேற்றம் 29/100
உங்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுடன் ஒரு துண்டு சீட்டில் 1234 அல்லது ஏதாவது ஒரு நாலு நம்பரை கிறுக்கி வைத்து விடுங்கள்.
தொலைந்து போனால் அதை கண்டு எடுப்பவன் அந்த நம்பரையே தொடர்ந்து போடுவான். நான்காவது முறை கார்டு பிளாக் செய்யப்படும்.
நமது பணம் பத்திரமாக இருக்கும்.
ஆனால் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் ஏதாவது ஒரு நான்கு நம்பர் தான். உங்கள் PIN நம்பர் அல்ல.
இன்னும் சற்று புத்திசாலித்தனமாக செய்யலாம்.
ஒரு நான்கு நம்பரை எழுதி லேசாக அடித்து விட்டு வேறு நான்கு நம்பரை எழுதி வைத்து விடுங்கள். எடுப்பவன் மெண்டல் ஆகிப்போகட்டும்


0 Comments:

Post a Comment

<< Home