VALUE PLUS

Develop yourselves. Unleash the inner power. Be a successful person in your life. You are the designer of your life

Thursday, November 28, 2013

ஆங்கிலம் பேச கற்று கொள்வது எப்படி ?

ஆங்கிலம் பேச கற்று கொள்வது எப்படி ?

கல்லூரியில் படிக்கும் பல மாணவர்கள் ஆங்கிலம் பேசுபவர்களைப்
பார்த்து பெரு மூச்சு விடுவதை பார்க்கிறேன். எப்படியாவது ஆங்கிலம் பேச கற்று கொள்ளவேண்டும் என துடிப்பதையும் பார்க்கிறேன்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள  ஆலோசனைகளை கடைப்பிடித்தாலே போதும்.
(நானும் தமிழ் வாயிலாக கற்றவன் தான். ஆனால் இன்று ஆங்கிலத்தில் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறேன்)  உங்களாலும் முடியும்.

1, தினசரி ஒரு ஆங்கில நாளேடு ஒன்றை எடுத்து ஒரு பக்கத்தினை வாய் விட்டு சப்தமாக படிக்கவும். (ஒரு வார்த்தையை எப்படி உச்சரிப்பது என கஷ்டபட்டால், இணையதளத்தினில் சென்று  http://thesaurus.comஎன்ற தளத்தில் search thesaurus என்ற இடத்தில அந்த வார்த்தையை type  செய்து speaker படத்தை கிளிக் செய்தால் அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என speaker ல்  நீங்கள் கேட்கலாம்.)  or try in  http://www.thefreedictionary.com/
2. நீங்கள் படித்த அதே பக்கத்தை உங்கள் நண்பரை விட்டு படிக்க சொல்லுங்கள். கேள்வி ஞானம் பலமானது. எல்லா சினிமா பாடல்களும் அத்துபடி ஆனது அதன் மூலமாகத்தானே.
3. தொலைகாட்சியில் ஆங்கில படம் பார்க்கும் பொழுது அதில் வரும்
subtitle  களை கூடவே படித்து கொண்டு வாருங்கள்.
4. நிறைய சேனல்களில் இரவு அன்றைய நாளின் பிரச்னைகளை பற்றி மூன்று நான்கு பேர் அலசிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் எப்படி உரை ஆடுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து வாருங்கள். கருத்து மறுப்புதலைக்கூட எவ்வளவு அழகாக சண்டையே போடாமல் தெரிவிக்கிறார்கள் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
5. ஆங்கில சொற்பொழிவுகளை http://youtube.com என்ற தளத்தினில் சென்று பார்த்து வரவும்.
6. தொலைகாட்சியில் ஆங்கில செய்திகள் வாசிக்கும் பொழுது நன்கு கவனித்து வரவும்.
7. நண்பர்களிடம் தினமும் ஒரு ஐந்து நிமிடம் ஆங்கிலத்தில் பேசி வரவும்.

இந்த முயற்சிகளை தொடர்ந்து நான்கு மாதம்  செய்து வந்தால் நீங்களே என்னிடத்தில் " Sir, How are you sir ? I just practised your tips.  I am able to speak fluently now sir" சொல்வீர்கள்.     வாழ்த்துக்கள்.

A.Shanmugasundaram
Corporate Trainer
98404 85595

Friday, November 01, 2013

இன்று ஒரு முடிவெடுங்கள்.

மாணவர்களே

நீங்கள் சரித்திரம் படித்தது போதும். சரித்திரம் படைக்க தயாராகுங்கள். நீங்கள் ஒரு சாதாரண 18 வயது மாணவனாக இருக்க விரும்புகிறீர்களா அல்லது அனைத்து 18 வயது மாணவர்களும் உங்களைப்பார்த்து ஆச்சர்ய பட வைக்கும் 18 வயது மாணவனாக இருக்க விரும்புகிறீர்களா ? இன்று ஒரு முடிவெடுங்கள்.

ஒரு சாதாரண கூட்டத்தில் ஏன் இருக்க வேண்டும் ?

மொபைல் போன், SMS அனுப்புதல் SMS  forward  செய்தல் வீண் அரட்டை facebook இல் தவம் கிடத்தல் சினிமா பார்ட்டி பெண்களின் நட்புக்காக அலைதல் இவைகள் சாதாரண மாணவர்கள் செய்து கொண்டு இருப்பது. இவைகள் உங்கள் தேவைகள் என்றால் அந்த கூட்டத்தோடு கலந்து விடுங்கள். இல்லையெனில் சரித்திரம் படைக்க தயார் ஆகுங்கள். நீங்கள் ஏன் இந்த கூட்டத்தில் ஒரு சராசரி மாணவனாக இருக்க வேண்டும் ? கூட்டத்தை விட ஒரு படி மேலே போகலாமே. மாணவ பருவத்திலேயே பல சாதனைகளை படைத்தவர்கள் அதிர்ஷ்டத்தை  உருவாக்கியவர்கள் ஏராளம். அவர்கள் இந்த கூட்டதிலிருந்து ஒரு படி மேலே சென்றவர்கள். பத்தோடு பதினொன்றாக இருக்க பிரியபடாதீர்கள். நூறோடு நூற்றி ஒன்றாக இருக்க விருப்பபடதீர்கள். நீங்கள் ஒரு தனிப்பிறவி. சக்தி மான். உங்களது திறமைகளை கண்டு பிடித்து வாழ்வில் உயர வேண்டிய நபர்.

உங்களது வாழ்க்கை இலட்சியங்களை இலக்குகளை தெளிவாக்குங்கள். ஒவ்வொரு நாளும் அதை நோக்கியே சிந்தனைகளை கொண்டு அதை நோக்கியே முன்னேறுங்கள். பணக்காரனாக வேண்டும் என்று வெறுமனே நினைத்து கொண்டிராமல் பணத்தை சம்பாதிப் பதற்கான திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். உங்களது எந்த பழக்க வழக்கங்கள் உங்களை இலக்கு நோக்கி அடைய உதவி புரியுமோ அதில் உங்களது சிரத்தன்மையை பதியுங்கள். எந்த பழக்க வழக்கங்கள் உங்களது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என தெரிந்து விடு படுங்கள். இலக்குகளை அடைய புதிய திறமைகள் தேவை எனில் அதை கற்று கொள்ளுங்கள்.


நீங்கள் பிறக்கும் பொழுது ஏழையாக பிறந்திருக்கலாம். ஆனால் இறக்கும் பொழுது ஏழையாக இறக்க கூடாது. சாதனையாளராக தான் பணக்காரனாக தான் இருக்க வேண்டும். இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. வெற்றி பெற தயாராகுங்கள். வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துங்கள்.  

அட்வான்ஸ் வாழ்த்துகள்.

அ ஷண்முக சுந்தரம் பயிற்சியாளர் 98404 85595