இன்று ஒரு முடிவெடுங்கள்.
மாணவர்களே
நீங்கள் சரித்திரம்
படித்தது போதும். சரித்திரம் படைக்க தயாராகுங்கள். நீங்கள் ஒரு சாதாரண 18 வயது மாணவனாக
இருக்க விரும்புகிறீர்களா அல்லது அனைத்து 18 வயது மாணவர்களும் உங்களைப்பார்த்து ஆச்சர்ய
பட வைக்கும் 18 வயது மாணவனாக இருக்க விரும்புகிறீர்களா ? இன்று ஒரு முடிவெடுங்கள்.
ஒரு சாதாரண
கூட்டத்தில் ஏன் இருக்க வேண்டும் ?
மொபைல் போன்,
SMS அனுப்புதல் SMS forward செய்தல் வீண் அரட்டை facebook இல் தவம் கிடத்தல்
சினிமா பார்ட்டி பெண்களின் நட்புக்காக அலைதல் இவைகள் சாதாரண மாணவர்கள் செய்து கொண்டு
இருப்பது. இவைகள் உங்கள் தேவைகள் என்றால் அந்த கூட்டத்தோடு கலந்து விடுங்கள். இல்லையெனில்
சரித்திரம் படைக்க தயார் ஆகுங்கள். நீங்கள் ஏன் இந்த கூட்டத்தில் ஒரு சராசரி மாணவனாக
இருக்க வேண்டும் ? கூட்டத்தை விட ஒரு படி மேலே போகலாமே. மாணவ பருவத்திலேயே பல சாதனைகளை
படைத்தவர்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்கியவர்கள்
ஏராளம். அவர்கள் இந்த கூட்டதிலிருந்து ஒரு படி மேலே சென்றவர்கள். பத்தோடு பதினொன்றாக
இருக்க பிரியபடாதீர்கள். நூறோடு நூற்றி ஒன்றாக இருக்க விருப்பபடதீர்கள். நீங்கள் ஒரு
தனிப்பிறவி. சக்தி மான். உங்களது திறமைகளை கண்டு பிடித்து வாழ்வில் உயர வேண்டிய நபர்.
உங்களது வாழ்க்கை
இலட்சியங்களை இலக்குகளை தெளிவாக்குங்கள். ஒவ்வொரு நாளும் அதை நோக்கியே சிந்தனைகளை கொண்டு
அதை நோக்கியே முன்னேறுங்கள். பணக்காரனாக வேண்டும் என்று வெறுமனே நினைத்து கொண்டிராமல்
பணத்தை சம்பாதிப் பதற்கான திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். உங்களது எந்த பழக்க வழக்கங்கள்
உங்களை இலக்கு நோக்கி அடைய உதவி புரியுமோ அதில் உங்களது சிரத்தன்மையை பதியுங்கள். எந்த
பழக்க வழக்கங்கள் உங்களது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என தெரிந்து விடு படுங்கள்.
இலக்குகளை அடைய புதிய திறமைகள் தேவை எனில் அதை கற்று கொள்ளுங்கள்.
நீங்கள் பிறக்கும்
பொழுது ஏழையாக பிறந்திருக்கலாம். ஆனால் இறக்கும் பொழுது ஏழையாக இறக்க கூடாது. சாதனையாளராக
தான் பணக்காரனாக தான் இருக்க வேண்டும். இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. வெற்றி
பெற தயாராகுங்கள். வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துங்கள்.
அட்வான்ஸ் வாழ்த்துகள்.
அ ஷண்முக சுந்தரம் பயிற்சியாளர் 98404 85595
0 Comments:
Post a Comment
<< Home